கிரெடிட் கார்டு பயனாளர்கள் அனைவரும் ஒவ்வொரு பில்டிங் காலத்தின் முடிவிலும் கிரெடிட் கார்டு பில்லை பெறுவார்கள். அவ்வாறு வழங்கப்படும் கிரெடிட் கார்டு பில்லில் பிழைகள் ஏதாவது இருந்தால் நாமே அவற்றை எளிதில் கண்டுபிடிக்கலாம். ஒருவேளை இதை அறியவில்லை என்றால் அதிகமாக பணம் செலுத்த நேரிடும். எனவே கிரெடிட் கார்டு பில்லில் உள்ள பிழைகள் உங்களை நிதி ரீதியாக பாதிக்கும் முன்பு அவற்றை கண்டறிய உதவும் சில வழிகளை நீங்கள் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.
கிரெடிட் கார்டு பில்லில் எவற்றையெல்லாம் பார்க்க வேண்டும்?
முதலில் கிரெடிட் கார்டு பில்லில் முகவரி, பெயர், கார்டு வரம்பு, பயன்படுத்தப்பட்ட வரம்பு, நிலுவைத் தொகை, குறைந்தபட்ச தொகை, கடைசி பணம், அனைத்து பரிவர்த்தனைகள் மேற்கொண்ட தேதி, கிரெடிட் கார்டில் குவிந்துள்ள reward புள்ளிகள் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். நீங்கள் பயன்படுத்தும் கிரெடிட் கார்டு நிறுவனம் உங்களுக்கு எத்தனை வகையான கட்டணங்களை உங்களிடம் இருந்து வசூலித்துள்ளது என்பதை கட்டாயம் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும்.
அதில் நிபதனைகள் மற்றும் விதிமுறைகளை படித்து பார்ப்பது மிகவும் அவசியம். கிரெடிட் ரிப்போர்ட்டுகளை உங்கள் காடு விவரங்களை சரி பார்ப்பது மிகவும் அவசியம்.இதெல்லாம் பார்ப்பதற்கு மிகவும் சிரமம் என்று நீங்கள் நினைத்தால் நீங்கள் பயன்படுத்தும் பணத்தை விட அதிகமாக செலுத்த வேண்டி இருக்கும். எனவே இதையெல்லாம் பார்த்து தெரிந்து கொண்டு பணத்தை செலுத்துங்கள்.