Categories
தேசிய செய்திகள்

கிரெடிட் கார்டு மூலம் யுபிஐ கட்டணம்?…. இந்திய ரிசர்வ் வங்கி எடுத்த அதிரடி முடிவு….!!!!

இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் பண மதிப்பாய்வுக் கொள்கையின் முடிவுகளை வெளியிட்டதுடன், ரெப்போ விகிதத்தை உயர்த்துவதாகவும் அறிவித்து இருக்கிறார். நாட்டில் பணவீக்கம் அதிகரித்துவரும் நிலையில், ரிசர்வ் வங்கி கணித்துள்ள மதிப்பீட்டின் அடிப்படையில், இந்த நிதி ஆண்டில் பணவீக்கம் 6.7 சதவீதம் ஆக இருக்கும். இந்த நிதி ஆண்டின் முதல் காலாண்டில் பணவீக்கம் 7.5 சதவீதம் ஆகவும், 2ம் காலாண்டில் 7.4 சதவீதம் ஆகவும், 3ம் காலாண்டில் 6.2 சதவீதம் ஆகவும், 4வது காலாண்டில் 5.8 சதவீதம் ஆகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இப்போது நீங்கள் யுபிஐ பேமெண்டில், கிரெடிட்கார்டு வாயிலாக பணம் செலுத்தமுடியும். இந்திய ரிசர்வ் வங்கி அதன் வாடிக்கையாளர்களுக்கான டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு கிரெடிட்கார்டு வாயிலாக யுபிஐ கட்டணம் செலுத்தும் வசதியை வழங்க முடிவுசெய்துள்ளது. ரிசர்வ் வங்கி வழங்கும் இந்த வசதியானது ரூபே கிரெடிட்கார்டுடன் துவங்கப்பட போகிறது.

அதன்பின் சில நாட்களுக்கு பின் மற்ற கார்டுகள் வாயிலாகவும் இந்த வசதியை வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதாரநிலை பற்றி இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள தகவல்களின்படி, இந்த வருடம் ஏப்ரல்-மே மாதங்களில் பொருளாதார நடவடிக்கைகளில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளது. தொற்றுநோய் பரவலுக்கு முன்பு உற்பத்தி வளர்ச்சி எப்படி இருந்ததோ, அதைவிட அதிகமாக இப்போது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |