பொருளாதார நடவடிக்கைகள் மீளத் தொடங்கியதன் அறிகுறியாக சென்ற மே மாதத்தில் கிரெடிட் கார்டுகள் மூலம் ஒரு லட்சத்து 14 ஆயிரம் கோடி ரூபாயை வாடிக்கையாளார்கள் செலவழித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இது முந்தைய 2021ஆம் ஆண்டின் இதே மாதத்தில் செலவிட்டதை விட 118 சதவிகிதம் அதிகமாகும்.
ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்குவதற்கு செலவழித்தது, சுற்றுலாப் பயணம் மேற்கொள்வதற்காக செலவழித்தது போன்றவை அதிகரித்ததே காரணம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கிரெடிட் கார்டு மூலம் கடன்பெற்று செலுத்தாமல் இருப்பதும் 3 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளது.