Categories
தேசிய செய்திகள்

கிரெடிட் கார்டை எப்படி தேர்வு செய்து வாங்குவது?…. அதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன?….. வாங்க பார்க்கலாம்…..!!

கிரெடிட் கார்டு வாங்க முடிவு செய்வதை விட எந்த கிரெடிட் கார்டு வாங்குவது என்பதை தீர்மானிப்பது சிரமத்திலும் சிரமம். ஏனெனில், மார்க்கெட்டில் பலவகையான கிரெடிட் கார்டுகள் உள்ளன. தவறான கிரெடிட் கார்டை தேர்ந்தெடுப்பது ஆபத்து. எனவே, உங்களுக்கான சிறந்த கிரெடிட் கார்டை தேர்ந்தெடுப்பது எப்படி என்பதை பார்க்கலாம்.

கிரெடிட் காடுகளில் பல வகையான சலுகைகள் கிடைக்கின்றன. ஆனால், ஒவ்வொரு கார்டுக்கு ஏற்ப சலுகைகள் மாறுபடும். ஷாப்பிங் சலுகைகள், உணவகம், ஹோட்டல், விமானப் பயணம், டிக்கெட் புக்கிங் என பல சலுகைகள் கிடைக்கலாம். இதுபோக, தற்போது பல்வேறு கிரெடிட் கார்டுகளில் பெட்ரோல், டீசல் போடுவதற்கும் சலுகைகள் கிடைக்கிறது. அதாவது, கிரெடிட் கார்டு பயன்படுத்தி பெட்ரோல், டீசல் போடும்போது எரிபொருள் கூடுதல் கட்டணம் (fuel surcharge) குறிப்பிட்ட சதவிகிதம் தள்ளுபடி செய்யப்படுகிறது.

ஒவ்வொரு நபருக்கும் தேவைகள் மாறுபடும். எனவே, உங்கள் தேவை என்ன, கிரெடிட் கார்டில் என்ன சலுகைகள் கிடைக்கிறது என்பதை பொருத்திப் பார்த்து முடிவு செய்யலாம். சிலர் தொழில் ரீதியாகவோ, மற்ற காரணங்களுக்காகவோ அடிக்கடி வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டியிருக்கும். எனவே, சர்வதேச விமான நிலையங்களில் lounge பயன்பாடு உள்ளிட்ட வசதிகள், சலுகைகளை பல்வேறு கிரெடிட் கார்டுகள் வழங்குகின்றன.

இதை கவனத்தில் கொண்டு கிரெடிட் கார்டை தேர்வு செய்யலாம். சலுகைகளை தவிர மற்ற சில அம்சங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும். பயணக் காப்பீடு, மருத்துவக் காப்பீடு போன்ற சேவைகளும் கிரெடிட் கார்டுகளில் கிடைக்கின்றன. தேவைக்கு ஏற்ப அதையும் பரிசீலிக்கலாம். முக்கியமாக, கிரெடிட் கார்டு கடணங்களுக்கான வட்டி, கூடுதல் கட்டணங்கள் ஆகியவற்றை தெரிந்துகொண்டு முடிவெடுக்க வேண்டும்.

Categories

Tech |