இந்தியாவில் வங்கி கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் பணப் பரிவர்த்தனைக்காக கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகளை வழங்குகிறது. இதனை மக்கள் பயன்படுத்தி சாதாரண கடைகள் முதல் ஆன்லைன் ஷாப்பிங் வரை அனைத்து இடங்களிலும் பணம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் கிரெடிட், டெபிட் கார்டு மூலம் பணம் மோசடிகள் நடப்பது அதிகரித்துள்ளது. இதனை தடுக்க வங்கிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சமீபத்தில் மத்திய அரசு வங்கி ஆன்லைன் விற்பனை நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு விவரங்களை சேமித்து வைக்க கூடாது என்று உத்தரவிட்டது.
எப்போதும் நாம் ஆன்லைன் வழியாக ஒரு பொருளை வாங்கும்போது அதற்கான பணத்தை வாங்கி கணக்கு மூலம் செலுத்துகிறோம். இதற்கு உங்களிடம் வங்கி கணக்கு மற்றும் கார்டு சார்ந்த விவரங்களை உள்ளிட வேண்டாம். மறுமுறை நீங்கள் ஷாப்பிங் செய்யும்போது அதுவாகவே கார்டு விவரங்களை உள்ளிடும் இந்த முறை மூலம் வாடிக்கையாளர்களின் தரவுகள் திருடப்படுகிறது. அதனால் ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் விவரங்களை சேமிக்க தடை விதிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு மூலம் நடைபெறும் மோசடிகளை தடுக்க விதிகள் மாற்றப்பட்டுள்ளது. அதாவது, கார்ட் ஆன் ஃபைன் டோக்கனைசேஷன் முறை கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் கிரெடிட், டெபிட் கார்டுகள் வழங்குபவர்கள் மற்றும் அதன் நெட்வொர்க்கை தவிர வேறு யாரும் வாடிக்கையாளர்களின் விவரங்களை பெற முடியாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மேலும் வருகின்ற அக்டோபர் 1ஆம் தேதி முதல் டோக்கனைசேஷன் முறை நடைமுறைக்கு வர உள்ளது.