Categories
தேசிய செய்திகள்

கிரெடிட் / டெபிட் கார்டு யூஸ் பண்றீங்களா…? – அதிரவைக்கும் செய்தி…!!!

இன்றைய காலகட்டத்தில் கிரெடிட் / டெபிட் கார்டு இல்லாதவர்களே கிடையாது என்ற அளவிற்கு அனைவருடைய கையிலும் கிரெடிட் கார்டு வந்துவிட்டது. அன்றாட செலவுகளை பூர்த்தி செய்வதற்கும், ஷாப்பிங் செய்வதற்கும் முக்கியமான ஒன்றாக கிரெடிட்/டெபிட்  கார்டு மாறிவிட்டது. ஆன்லைன் மூலமாகவும், நேரடியாகவும் நமக்கு விருப்பமான பொருட்களை வாங்குவதற்கு கிரெடிட் கார்டு முக்கிய பங்களிப்பை கொடுக்கின்றன. இவ்வாறு வங்கிகள் வழங்கும் டெபிட் கிரெடிட் கார்டுகள் பெரும்பாலும் wi-fi தொழில்நுட்பம் கொண்டவை.

இவற்றை பின் நம்பர் கொடுக்காமல் கடைக்காரரின் ஓபிஎஸ் இயந்திரம் அருகே கொண்டு சென்றால் போதும் பணம் செலுத்தப்பட்டு விடும். இதன் ஆபத்து நீங்கள் அறியாமலேயே உங்கள் கார்டு (பாக்கெட்டில் வைத்திருந்தால் கூட) அருகே இயந்திரத்தை கொண்டு சென்று பணத்தை திருடி விட முடியும். ஒரு பேமெண்ட்டுக்கு இரண்டு முறை பணம் எடுத்து விடலாம். எனவே wifi டெபிட் கார்டு மூலம் தொடாமல் பணம் செலுத்தும் போது கடைக்காரர் மெஷினில் தொகையை சரிபார்த்தபின் கார்டை அருகே கொண்டு செல்லவும். 4 பச்சை விளக்குகள் எரிந்தால் அல்லது பீப் ஒலி வந்தால் முடிந்துவிட்டது, சேஃப்டி. உடனே உங்கள் போனுக்கு மெசேஜ் வந்தது பார்க்கவும். கார்டை  அலுமினியம் பாயிலில் மூடுவது, RFID-Blocking உலோக வொலட்டில் வைப்பதன் மூலம் திருட்டை தடுக்க முடியும்.

Categories

Tech |