Categories
தேசிய செய்திகள்

கிரெடிட்- டெபிட் கார்டு வைத்திருப்போருக்கு…. ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய தகவல்….!!!!!

கிரெடிட் மற்றும் டெபிட்கார்டுகளைப் பயன்படுத்துவோருக்கு முக்கிய செய்தி ஒன்று வெளியாகி இருக்கிறது. இது பற்றிய தகவல் வெளியாகி இருப்பதால், இந்த கார்டுகளை பயன்படுத்துபவர்கள் இத்தகவலை அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும். கிரெடிட்-டெபிட்கார்டுகளில் அக்.1ஆம் தேதி முதல் இம்மாற்றம் அமலுக்கு வரும் என்று ரிசர்வ் வங்கியானது தெரிவித்துள்ளது. அக்டோபர் 1 ஆம் முதல் வங்கித்துறை தொடர்பான விதிகளில் பெரியமாற்றம் வரப்போகிறது. இதற்குரிய உத்தரவையும் ரிசர்வ் வங்கி வெளியிட்டு உ ள்ளது. மேலும் கார்டு-ஆன்-பைல் டோக்கனை சேஷன் (சிஓஎஃப் கார்டு டோக்கனைசேஷன்) விதிகளை வருகிற 1ஆம் தேதி முதல் கொண்டு வருவதாக ரிசர்வ்வங்கி தெரிவித்து உள்ளது.

இதற்கிடையில் டோக்கனை சேஷன் முறையில் மாற்றம்செய்யப்பட்ட பின், கார்டுதாரர்களுக்கு கூடுதல் வசதிகள், பாதுகாப்பு கிடைக்கும் என்று ரிசர்வ்வங்கி தெரிவித்துள்ளது. அத்துடன் கார்டு பயன்படுத்துபவர்களின் கட்டணமுறையும் மேம்படுத்தப்படுகிறது. ரிசர்வ்வங்கி அளித்துள்ள தகவலின் அடிப்படையில் கிரெடிட்-டெபிட்கார்டுகள் வாயிலாக பணம் செலுத்துவது முன்பைவிட தற்போது பாதுகாப்பானது என்பதே புது விதிகளின் நோக்கமாகும். சென்ற சில தினங்களாக இந்த இரு கார்டுகளில் மோசடி நடப்பதாகப் பல்வேறு புகார்கள் வந்தது.

எனினும் புதிய விதி நடைமுறைக்கு வந்தபின், இந்த மோசடிகளுக்கு வாய்ப்புகள் மிககுறைவு. ஆன்லைன், பாயின்ட் ஆப் சேல் (பிஓஎஸ்) அல்லது டெபிட் (அல்லது) கிரெடிட் கார்டு வாயிலாக பணப்பரிமாற்றம் இன்னும் மேம்படும். ஆகவே புது விதிகளின்படி, அந்த இரண்டு கார்டு யூசர்களின் முழுதரவுகளும் டோக்கன்களாக மாற்றப்படும். இதன் வாயிலாக உங்களின் தனிப்பட்ட தகவல்கள் பிரத்யேகமாக மறைத்து வைக்கப்படும். கார்டுகளை டோக்கன் முறைக்கு மாற்றுவதற்கு வாடிக்கையாளர்கள் கோரிக்கை வைக்கவேண்டும். அவ்வாறு கோரிக்கை வைத்து டோக்கன்களாக மாற்றப்படும் கார்டுதாரர்கள் இதற்கென எந்த கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.

Categories

Tech |