கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு தொடர்பான புதிய விதிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் ரிசர்வ் வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு தொடர்பான புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. இந்த விதிமுறைகள் பேமென்ட்ஸ் பேங்க், மாநில கூட்டுறவு வங்கிகள், மாவட்ட மற்றும் மத்திய கூட்டுறவு வங்கிகள் தவிர மற்ற எல்லாவற்றுக்கும் பொருந்தும். இந்த வழிகாட்டுதல்களை கடைபிடிக்காத வங்கிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என ஆர்.பி.ஐ அறிவித்துள்ளது. இந்த கார்டுகளை வாடிக்கையாளர்களை கட்டாயப்படுத்தி வழங்கினால் அந்த வங்கிகளுக்கு அபராதம் விதிக்கப்படும்.
அதன்பிறகு ரூபாய் 100 கோடிக்கு மேல் நிகர மதிப்பு வைத்திருக்கும் வங்கிகள் கிரெடிட் கார்டு தொழிலளை மேற்கொள்வதற்கு ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியுள்ளது. இந்த அனுமதி வழங்கப்பட்ட வங்கிகள் சுயமாகவோ அல்லது மற்ற வங்கிகளுடன் கூட்டாகவோ சேர்ந்து தொழிலளை மேற்கொள்ளலாம். ஆனால் கிரெடிட் கார்டு தொழில்களை மேற்கொள்வதற்கு தனித்துறை நிறுவனங்களை அமைப்பதற்கு ரிசர்வ் வங்கியின் அனுமதி பெற வேண்டும். இதனையடுத்து வங்கிகள் டெபிட் கார்டுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்கு ரிசர்வ் வங்கியிடம் அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை.
இதைத்தொடர்ந்து கிராமப்புற பிராந்திய வங்கிகள் தங்களுடைய ஸ்பான்சர் வங்கிகள் அல்லது பிற வங்கிகளுடன் இணைந்து கிரெடிட் கார்டுகளை வழங்கலாம். இந்த வங்கிகள் குறைந்தபட்சம் 100 கோடிக்கு மேல் நிகர மதிப்பு கொணட வங்கிகளிடமிருந்து முன் அனுமதி பெற்ற பிறகே கிரெடிட் கார்டு வழங்கலாம்.இதைத்தொடர்ந்து ரிசர்வ் வங்கியின் முன் அனுமதி பெறாமல் NBFC டெபிட் கார்டுகள், கிரெடிட் கார்டுகள், சார்ஜ் காடுகள் அல்லது தயாரிப்புகளை விர்ச்சுவலாகவோ அல்லது பிசிக்களாகவோ வழங்கக்கூடாது.
கிரெடிட் கார்டு விண்ணப்பங்களுடன் வட்டி விகிதம், கட்டணங்களின் விகிதம், கார்டுகளின் முக்கிய அம்சங்களைக் கொண்ட One page key fact statement கார்டு வழங்குனர்களை ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. கிரெடிட் கார்டு விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டால் அதற்கான உரிய காரணங்களை எழுத்துப் பூர்வமாக அட்டை வழங்குபவர்கள் தெரிவிக்க வேண்டும். காணாமல் போன கிரெடிட் கார்டுகள் மற்றும் மோசடிகள் போன்றவற்றிற்கு இன்சூரன்ஸ் வழங்குவது தொடர்பாக பரிசீலனை செய்வதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் கிரெடிட் கார்டு பெற்ற 30 நாட்களுக்குள் அதை ஆக்டிவேட் செய்யாவிட்டால் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளரிடம் இருந்து ஓடிபி அடிப்படையிலான ஒப்புதலை கார்டு வழங்குனர்கள் வாங்க வேண்டும். அதன்பிறகு நடப்பு மற்றும் சேமிப்பு வங்கி கணக்கு இருப்பவர்களுக்கு மட்டுமே கிரெடிட் கார்டு வழங்கப்படும். ஆனால் கிரெடிட் கார்டு வழங்குவதற்கு வாடிக்கையாளர்களை வங்கிகள் கட்டாயப்படுத்த கூடாது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.