யு பி ஐ கட்டணம் செலுத்தும் முறை நாளுக்கு நாள் பிரபலம் அடைந்து கொண்டே வருகிறது. காய்கறி கடை முதல் கழிப்பிடம் வரை யு பி ஐ மூலமாக கட்டணம் செலுத்துவது வாடிக்கையாகிவிட்டது அத்தகைய சூழலில் உங்களின் கிரெடிட் கார்டு பில்லையும் யுபிஐ ஐடி வழியாக நீங்கள் செலுத்தி விட முடியும். ஆனால் அதற்கு நீங்கள் உங்களின் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகளை யுபிஐயுடன் இணைத்து இருக்க வேண்டும் மேலும் உங்கள் வாலட்டில் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகளை இணைப்பதற்கான வழிமுறைகளை இங்கே காண்போம். பேடிஎம் பயன்பாட்டிற்கு சென்று உங்கள் ப்ரொபைல் படத்தை கிளிக் செய்ய வேண்டும் செட்டிங்ஸ்களுக்கு சென்று சேமித்த அட்டைகள் விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.
அதன்பின் add new card என்பதை கிளிக் செய்ய வேண்டும் உங்களிடம் அட்டை விவரங்கள் கேட்கப்படும் சமீபத்திய ஆர்பிஐ கைடு லைன்ஸ் படி கார்டை சேமி என்பதே தேர்ந்தெடுத்த பின் otp யை உள்ளிட்ட உடன் உங்கள் கிரெடிட் கார்டு பேடிஎம்டன் இணைக்கப்பட்டு விடும் இதன் பின் போன்பே சென்று உங்கள் சுயவிவரப் படத்தை கிளிக் செய்ய வேண்டும் அங்கு view all payment methods ஆப்ஷனுக்கு செல்ல வேண்டும். கிரெடிட் டெபிட் கார்டுகளின் add card என்பதை கிளிக் செய்ய வேண்டும். உங்கள் அட்டை விவரங்களை உள்ளிட்டு add விருப்பத்தை கிளிக் செய்யவும்.
இப்போது உங்களுக்கு வரும் ஓடிபி உள்ளிட்டால் போன் பேவுடன் கிரெடிட் கார்டு இணைக்கப்பட்டு விடும் இதனை அடுத்து கூகுள் பேயை திறந்து உங்கள் சுய விவரத்திற்கு செல்ல வேண்டும் பேமென்ட் ஆப்ஷன் மூலம் கிரெடிட் கார்டை தேர்ந்தெடுப்பதற்கான விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும். இதன்பின் உங்கள் கார்டை ஸ்கேன் செய்ய வேண்டும் உங்கள் விவரங்களை மேனுவலாக பதிவிட வேண்டும் காலாவதி தேதி மற்றும் சி சி விஐ உள்ளிட வேண்டும் விதிமுறைகளைப் படித்த பின் மேனுவல் என்பதை கிளிக் செய்த பிறகு உங்களுக்கு ஒரு ஓடிபி வரும் அதை உள்ளிட்ட பிறகு செயல்முறை முடிவடைகிறது இவற்றை இணைப்பதன் மூலமாக என்ன பயன் என நினைக்கலாம். ஆனால் யுபி மூலம் அனைத்து இடங்களிலும் கிரெடிட் கார்டு மூலம் நீங்கள் பணம் செலுத்த முடிகிறது அதற்கு கூடுதல் கட்டணம் இல்லை ஆனால் 2000 ரூபாய் மட்டுமே லிமிட்.