உருளை கீழே விழுந்து மஞ்சள் நிற விஷவாயு கசிந்ததால் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜோர்டான் நாட்டில் அகுவாபா என்ற துறைமுகம் அமைந்துள்ளது. இந்த துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கப்பல் ஒன்றில் கிரேன் உதவியுடன் பெரிய அளவிலான உருளை ஒன்று இறக்கப்பட்டுள்ளது. இந்த உருளை திடீரென கிரேனிலிருந்து நழுவி கப்பலில் விழுந்தது. இந்த உருளை விழுந்ததில் மஞ்சள் நிற விஷவாயு பெருமளவில் பரவி அந்த பகுதியை சுற்றிலும் சூழ்ந்ததுள்ளது. இதனை தொடர்ந்து, இந்த பகுதியிலிருந்த துறைமுக பணியாளர்கள் தப்பியோடினர்.
மேலும் துறைமுகத்திற்கு அருகே உள்ளவர்களை வெளியேற்றப்பட்டனர். இருப்பினும் இங்கு குடியிருப்பில் வசித்தவர்கள் வீடுகளிலேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த விஷவாயுவினால் சம்பவ இடத்திலேயே முதலில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். பின்னர் இந்த உயிரிழப்பு எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. இந்த சம்பவத்தினால் அந்நாட்டு பிரதமர் பீஷர் கசாவ்னே மற்றும் உள்துறை மந்திரி மஜென் அல்-பராயா ஆகியோர் அந்தப் பகுதிக்கு சென்றுள்ளனர். மேலும் விஷவாயு கசிந்த உருளை கீழே விழுந்த சம்பவத்தில் 234 பேர் படுகாயமடைந்துள்ளனர் என குடிமக்கள் பாதுகாப்பு செய்தி தொடர்பாளர் ஆமர் அல்-சர்டாவி தெரிவித்துள்ளார்.