விசாகப்பட்டினம் ஹிந்துஸ்தான் கப்பல் கட்டும் துறைமுகத்தில் கிரேன் விழுந்து விபத்து ஏற்பட்டதில் 10 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளார்.
ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள இந்துஸ்தான் துறைமுகத்தில் ராட்சச கிரேன் மூலமாக கப்பலில் கண்டெய்னர் ஏற்றி வைக்கும் பணி நடைபெற்றது. கப்பல்களில் ஏற்றி இறக்குவதற்காக பணியில் தீவிரமாக ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது தீடிரென கிரேன் தொழிலாளர்கள் மீது சரிந்து விழுந்தது.
இதில் கிரேனுக்கு அடியில் பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கி கொண்டதாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதுவரை 6 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த விபத்து எப்படி எதனால் ஏற்பட்டது ? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை செய்து வருவதாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
The moment the crane crashed in #Visakhapatnam. Meanwhile toll rises to 6. Minister Avanthi Srinivas spoke to Hindustan Shipyard officials. https://t.co/MQ0joBr6rL pic.twitter.com/dFWQpOAWdD
— Krishnamurthy (@krishna0302) August 1, 2020