பாஜக தலைவர் அண்ணாமலை முதல்வரிடம் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் திமுக கட்சியின் தலைவராகவும் தமிழகத்தின் முதல்வராகவும் இருக்கும் மு.க ஸ்டாலின் அவர்கள் எதற்காக விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார். விசேஷ நாட்களில் வாழ்த்து சொல்வது தமிழர்களின் ஒரு மரபு. ஒரு குறிப்பிட்ட மரபினர் கொண்டாடும் பண்டிகைக்கு மட்டும் வாழ்த்து சொல்வது ஆட்சியாளர்களுக்கு அழகல்ல. முதல்வர் கடந்த வருடமும் இந்துக்கள் பண்டிகைக்கு வாழ்த்து சொல்லவில்லை.
இந்த வருடமும் முதல்வர் வாழ்த்து சொல்லாமல் இருந்தது மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. திமுக கட்சியின் தலைவராக மட்டும் இருந்து வாழ்த்து சொல்வதும் சொல்லாமல் இருப்பதும் அவருடைய தனிப்பட்ட விஷயம். ஆனால் தற்போது முதல்வர் ஸ்டாலின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரஜை. முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ சகோதரர்கள் கொண்டாடும் பண்டிகைக்கு மட்டும் வாழ்த்து சொல்லும் நீங்கள், எதற்காக இந்துக்கள் கொண்டாடும் பண்டிகைக்கு மட்டும் வாழ்த்து சொல்லவில்லை. இந்துக்களின் பண்டிகைக்கு வாழ்த்து சொல்லாமல் இருப்பதை கண்டிப்பாக ஏற்க முடியாது என்று கூறியுள்ளார்.