கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்புவரை ஊரடங்கு இருக்க வாய்ப்பில்லை என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
பிரிட்டனில் கொரோனா பாதிப்பு மீண்டும் உச்சம் தொட்டு வரும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்நாட்டில் ஒரே நாளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு இருக்க கிறிஸ்துமஸ் பண்டிகை வரை ஊரடங்கு இருக்க வாய்ப்பில்லை என அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். பிரிட்டனில் இரண்டு மணிநேரம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர்கள் பலர் ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததால் அவர் இந்த முடிவுக்கு வந்துள்ளதாக கூறினார். மேலும் ஒமிக்ரான் பரவல் குறித்து நிபுணர்கள் குழு கொண்டு ஆய்வு செய்து வருவதாகவும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு பிறகு பெரிய அளவிலான மற்றும் மிகக்கடுமையான ஒரு அடங்கி இருக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.