கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள விரிக்கோடு பகுதியில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஸ்வின் விஜய் என்ற மகன் இருந்துள்ளார். இவர் பழைய பகுதியில் இருக்கும் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் அஸ்வின் விஜய் உறவினரான சஜிகுமார் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் கிறிஸ்துமஸ் குடிலை பார்ப்பதற்காக சென்றுள்ளனர். இந்நிலையில் கல்லுக்குட்டி குருமாணி விளை முந்திரி ஆலை பகுதியில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோரம் நின்ற மரத்தில் பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த 2 பேரையும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சஜின் குமாரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். அஸ்வின் விஜய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.