ஐ.டி அதிகாரியின் வீட்டில் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காளப்பட்டி பகுதியில் ஐ.டி அதிகாரியான கிறிஸ்டோபர் என்பவர் வசித்து வருகிறார். இவர் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தனது குடும்பத்துடன் சொந்த ஊரான ராசிபாளையத்திற்கு சென்றுள்ளார். இதையடுத்து திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
அதன் பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 18 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து கிறிஸ்டோபர் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் வீட்டில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.