Categories
உலக செய்திகள்

கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தில்….கடத்தல் கும்பலை பிடித்து….காவல்துறையினரின் அதிரடி..!!

கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தில் சென்று கடத்தல் கும்பலை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். 

 

பெரு என்ற நாட்டின் தலைநகர் லிமாவில் உள்ள ஒரு வீட்டில் போதைப்பொருள் கடத்தி வந்துள்ளனர். இது குறித்து காவல் துறைக்கு ரகசிய தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே காவல் துறையினர் சீருடையில் சென்றால் கடத்தல் கும்பல் சுதாரித்துவிடுவர் என்பதால்   கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தில் சென்றுள்ளனர்.

இதன்படி இரு காவல்அதிகாரிகள் வாகனம் ஒன்றில் வீட்டின் அருகே சென்று உள்ளனர். மேலும் அந்த  வீட்டில் ஆட்கள் யாரேனும் இருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்த வெளியிலிருந்து கண்காணித்துக் கொண்டிருந்தனர். அதன்பிறகு காவல்துறையினர் கடத்தல் கும்பலின் வீட்டிற்கு சென்று சுத்தியலால்  அடித்து கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர்.

அப்போது அந்த வீட்டில் நான்கு பேர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இந்த கடத்தல் கும்பல், காவல்துறையினர் தான் கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தில் வந்திருக்கிறார்கள் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து, உடனடியாக அவர்களை கைது செய்துள்ள காவல்துறையினர் அவர்களிடமிருந்து போதைப் பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர். மேலும் துப்பாக்கி உட்பட பயங்கர ஆயுதங்களும் அவர்களிடமிருந்துள்ளது. அவற்றையும் போலீசார் கைப்பற்றியுள்ளார்கள். .

Categories

Tech |