சேலம் மாவட்டத்தில் உள்ள அஸ்தம்பட்டி டி.வி.எஸ் காலனியில் பொன் ராணி என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று இரவு நேரத்தில் வீட்டில் தனியாக இருந்தபோது கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்த ஒருவர் தெருவில் நின்ற நபர்களுக்கு சாக்லேட் கொடுத்துக் கொண்டே வந்தார். இந்நிலையில் வீட்டு வாசலில் நின்றபடியே பொன்ராணியும் கிறிஸ்துமஸ் தாத்தாவை பார்த்துக் கொண்டிருந்தார்.
இதனையடுத்து அவர் பொன்ராணிக்கு சாக்லேட்டை கொடுத்தார். அதனை வாங்கியவுடன் கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் பொன்ராணியின் கழுத்தில் கிடந்த 6 1/2 பவுன் தங்க சங்கிலியை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து பொன்ராணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரியின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் பெண்ணிடம் இருந்து தங்க நகையை பறித்து சென்ற நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.