Categories
மாநில செய்திகள்

கிறிஸ்துமஸ் நாளில் மழை… இத்தனை வருடங்களுக்கு பிறகா….? தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்ட தகவல்…!!!!!!

வானிலை ஆய்வு மையம் வருகிற டிசம்பர் 25-ஆம் தேதி பரவலாக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுத்து வருகின்ற நிலையில் அது பற்றிய பதிவு ஒன்றை தமிழ்நாடு வெதர்மேன் பதிவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்கள் கடந்த 20 வருடங்களில் இல்லாத விதமாக முதன்முறையாக கிறிஸ்துமஸ் நாளில் மழையை காணப்போகிறது. அதாவது கடைசியாக சென்னையில் கடந்த 21 ஆண்டுகளுக்கு முன்பாக கிறிஸ்துமஸ் நாளில் மழை பதிவாகியுள்ளது.

2021 -ஆம் வருடம்  சென்னை மட்டுமல்லாமல் கடலோர மாவட்டங்கள் தமிழகத்தின் உள் மற்றும் தெற்கு மாவட்டங்களும் 25-ஆம் தேதி மழையை சந்திக்க உள்ளது. வருகிற 25-ம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை டெல்டா மற்றும் தென்  மாவட்டங்களுக்கு மழை இருக்கும். அதிலும் குறிப்பாக ராமநாதபுரம், குமரி, நெல்லை, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் மழை இருக்கும். டிசம்பர் 24 – 25 முதல் 27 – 28 வரை பரவலாக மழை இருந்தாலும் விடுமுறை கால பயணங்களை மேற்கொள்ளலாம். மேலும் சபரிமலைக்கு செல்பவர்கள் ஆங்காங்கே சில இடங்களில் மழை பெய்வதை காண முடிகிறது. மாஞ்சோலை செல்ல திட்டமிட்டு இருப்பவர்கள் மட்டும் 25, 26, 27 போன்ற நாட்களில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |