ஐபிஎல் மினி ஏலம் நடைபெறும் தேதியை மாற்றம் செய்யக்கோரி பி.சி.சி.ஐ.யிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் மாதம் முதல் தொடங்கி நடைபெற உள்ளது. 2023 ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடருக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் மாதம் 23ஆம் தேதி நடைபெறும் என இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) ஏற்கனவே அறிவித்துள்ளது முன்னதாக கடந்த 15ஆம் தேதிக்குள் அனைத்து அணிகளும் தாங்கள் தக்க வைத்துள்ள வீரர்கள் மற்றும் விடுவிக்கப்பட்டுள்ள வீரர்கள் பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டது. அதன்படி 10 அணிகளும் பட்டியலை பிசிசிஐ இடம் வழங்கி விட்டது.
இதில் பெரும்பாலான அணிகள் வெளிநாட்டு பயிற்சியாளர்களையும், ஆலோசகர்களையும், பிற நிர்வாகிகளையும் கொண்டிருக்கிறது. எனவே அவர்களும் மினி ஏலத்தில் பங்கேற்பார்கள்.. ஆனால் டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதற்கு 2 நாட்களுக்கு முன்புதான் மினி ஏலம் நடைபெறுகிறது என்பதால் அவர்களால் கலந்து கொள்வதில் சிக்கல் ஏற்படலாம். இதன் காரணமாக பெரும்பாலான அணி நிர்வாகம் மினி ஏலத்திற்கான தேதியை மாற்றும் படி பி.சி.சி.ஐ.யிடம் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இருப்பினும் பிசிசிஐ இதுகுறித்து எந்த தகவலையும் இன்னும் தெரிவிக்கவில்லை. கோரிக்கையை ஏற்று பிசிசிஐ தேதியை மாற்றம் செய்யுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஐபிஎல் இல் உள்ள 10 அணிகளில் யார் யாரிடம் எத்தனை கோடி இருக்கிறது என்பதை பார்ப்போம்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி – 42. 25 கோடி
பஞ்சாப் கிங்ஸ் அணி – 32. 20 கோடி
லக்னோ ஜெயண்ட்ஸ் அணி – 23. 35 கோடி
மும்பை இந்தியன்ஸ் அணி – 20. 55 கோடி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி – 20. 45 கோடி
டெல்லி கேபிட்டல்ஸ் அணி – 19. 45 கோடி
குஜராத் டைட்டன்ஸ் அணி – 19. 25 கோடி
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி – 13. 20 கோடி
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி – 8.75 கோடி
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி – 7.5 கோடி