Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

கிறிஸ்துமஸ் பண்டிகை… சந்தையில் களைகட்டிய கால்நடை விற்பனை… இத்தனை கோடியா…??

வேலூர் மாவட்டம் அணைக்கட்டை அடுத்த பொய்கையில் வாரம் தோறும் செவ்வாய்க்கிழமை மாட்டு சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த சந்தைக்கு ஆடு, மாடு, கோழி போன்றவற்றை வியாபாரிகள் விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். அதிலும் முக்கிய விழா காலங்களில் கால்நடைகளின் விலை அதிகமாக இருக்கிறது. தற்போது மார்கழி மாதம் என்பதால் பலரும் ஐயப்பன் கோவில், முருகன் கோவில் உள்ளிட்ட கோவில்களுக்கு மாலை அணிந்து விரதம் இருக்க தொடங்கியுள்ளனர். மேலும் புயல், மழை காரணமாக சந்தையில் வியாபாரம் நடைபெறவில்லை.

இதனால் கடந்த சில வாரங்களாகவே கால்நடைகளின் விற்பனை மந்தமாக காணப்பட்டது. இந்நிலையில் வருகிற 25-ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பொய்கை சந்தைக்கு கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களிலிருந்தும் வேலூர் மாவட்டம் மற்றும் ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட சுற்று வட்டார மாவட்டங்களில் இருந்தும் கால்நடைகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது.

இதனையடுத்து வியாபாரிகளும், பொதுமக்களும் அந்த கால்நடைகளை வாங்குவதற்காக சந்தையில் குவிந்துள்ளனர். அவர்கள் போட்டி போட்டு கால்நடைகளை வாங்கி சென்றனர். அதிலும் குறிப்பாக ஜெர்சி, காளைகள், உளவு மாடுகள், கலப்பின மாடுகள் என ரூ.2,000-கும் மேற்பட்ட மாடுகளும், 500-க்கும் மேற்பட்ட ஆடுகளும், கோழிகளும் சந்தைக்கு கொண்டுவரப்பட்டது. சந்தையில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வியாபாரம் நடைபெற்றதாக வியாபாரிகள் கூறியுள்ளனர்.

Categories

Tech |