பாலஸ்தீனத்தில் உள்ள இயேசு நாதரின் பிறப்பிடமான பெத்லகேம் நகரில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பெருந்தொற்று காரணமாக சுற்றுலா பயணிகள் வரத்து இல்லை. இந்நிலையில் தற்போது கொரோனா கட்டுப்படுத்தப்பட்டு இந்த வருடம் இயேசுநாதர் பிறப்பின் பண்டிகையான கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அங்கு உலகமெங்கும் இருந்து சுற்றுலாப் பயணிகள் குவிய தொடங்கியுள்ளனர். இதனால் ஹோட்டல்கள் முன்பதிவு செய்யப்படுகிறது.
இது குறித்து அந்த நகர ஓட்டல் அதிபர்கள் சங்க தலைவர் எலியாஸ் அர்ஜா கூறியதாவது, “கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்றால் பயண கட்டுப்பாடுகள் மற்றும் பொதுமுடக்கங்கள் அமலில் இருந்தது. ஆனால் தற்போது அந்த நிலை இல்லை. அதனால் இங்குள்ள புனித தளங்களுக்கு வர வேண்டும் என்ற ஆவல் சுற்றுலா பயணிகள் மத்தியில் அதிகரித்துள்ளது. எனவே இந்த வருடம் புனித பூமியை பார்ப்பதற்கு கிறிஸ்துவ மத சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். மேலும் உலகமெங்கும் புதிய ஆண்டு எங்கள் தொழில் சிறப்பாக இருக்கும் என்று நம்புகிறோம்” என கூறியுள்ளார்.