டெல்லியில் காற்று மாசு அதிகமாக இருப்பதால் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நாட்களில் பட்டாசு வெடிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்று மாசு மிக அதிகமாக உள்ளது. அதனால் பொதுமக்கள் சுவாச பிரச்சனைகளால் அவதிப்பட்டு வருகிறார்கள். அதன் காரணமாக தீபாவளி பண்டிகைக்கு பட்டாசுகளை வெடிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டில் டெல்லி மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள பெரிய நகரங்கள், காற்று மாசு அதிகம் உள்ள நகரங்களில் பட்டாசு வெடிக்க தடை நீட்டிக்கப்பட்டது தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவித்துள்ளது.
மேலும் காற்று மாசு குறைவாக உள்ள நகரங்களில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு அன்று இரவு 11.55 மணி முதல் 12.30 மணி வரை பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அது மட்டுமன்றி அனைத்து மாவட்டங்களிலும் காற்று தர ஆய்வு மையத்தை விரைவில் ஏற்படுத்த வேண்டுமென தெரிவித்துள்ளது.