Categories
உலக செய்திகள்

கிறிஸ்துமஸ் மரத்தால் நடந்த கொடூரம்…. பரிதாபமாக உயிரிழந்த தந்தை, மகன்…. பெரும் பரபரப்பு….!!!!

அமெரிக்க நாட்டில் கிறிஸ்துமஸ் அன்று வீட்டில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 2 மகன்கள் மற்றும் தந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் பெனிசுலாவில் உள்ள Bucks கவுண்டி பகுதியில் எரிக் கிங் என்பவர் தன்னுடைய குடும்பத்தினருடன் வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் கிறிஸ்துமஸ் தினமான நேற்று அதிகாலையில் அவர்கள் வீட்டிலிருந்த கிறிஸ்துமஸ் மரத்தில் திடீரெண்டு தீப்பிடித்து மளமளவென எரிந்ததால், பெரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தின்போது வீட்டிலிருந்த எரிக் கிங்கின் மனைவி அவருடைய தாய் மற்றும் மூத்த மகன் ஆகியோர் தப்பி உள்ளனர். ஆனால் வீடு முழுவதும் தீ பரவியதால் வீட்டில் சிக்கிக்கொண்ட எரிக் மற்றும் அவருடைய 2 மகன்களான Liam மற்றும் Patrick தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இவர்களோடு சேர்ந்து வீட்டிலிருந்த 2 நாய்களும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் அறிந்த காவல்துறையினர் உடனே தீயணைப்பு உதவியுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

அதன் பின்னர் தீயை அணைக்க தீயணைப்பு உதவியுடன் போராடியுள்ளனர். ஆனால் வீட்டிலிருந்த கிறிஸ்துமஸ் மரம் உண்மையான மரம் என்பதால் அந்த மரத்தில் வைக்கப்பட்டிருந்த கிறிஸ்துமஸ் அலங்கார மின் விளக்குகளால் ஏற்பட்ட தீ விபத்தால் முழுவதும் தீப்பற்றி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இருந்தபோதிலும் இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |