Categories
உலகசெய்திகள்

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழாக்கள் ரத்து…? ரஷ்யா அதிகாரி தீவிர ஆலோசனை… வெளியான தகவல்…!!!!!

உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் நடவடிக்கை கிட்டத்தட்ட பல மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகின்ற நிலையில் இந்த போர் நடவடிக்கையானது அடுத்த வருடம் வரை நீடிக்கும் என கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே ரஷ்யாவின் போர் நடவடிக்கையால் உலக நாடுகளின் பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் சரிவை சந்தித்து பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களுக்கு கூட சிரமப்படும் அளவிற்கு நிலைமை சிக்கலாகி இருக்கிறது. இந்த சூழலில் போருக்கு தேவையான ஆயுதங்கள் வாங்குவதற்கு தேவையான நிதியை சேமிப்பதற்காக ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழாக்கள் ரத்து செய்யப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.

தலைநகர் மாஸ்கோவில் விழாக்கள் ரத்து செய்யலாமா என்று ரஷ்ய அதிகாரிகள் விவாதம் மேற்கொள்ள இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த சூழலில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க், கலுகா மற்றும் நிஷ்னி நோவ்கோரட் நகரங்களின் உள்ளூர் அதிகாரிகள் அணி திரட்டப்பட்டவர்களுக்கான உபகரணங்களை வாங்குவதற்காக பர்த் செட் பணத்தை சேமிப்பதற்கு புத்தாண்டு நிகழ்வுகளை ரத்து செய்து கொள்ளலாம் என திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்திருக்கிறது. இதில் மேலும் ஒரு சில ரஷ்ய நகரங்கள் விழாக்களை ரத்து செய்வதற்கான அறிவிப்பை ஏற்கனவே வெளியிட்டு விட்டதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கிறது.

Categories

Tech |