கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு கொளத்தூர் தொகுதியில் 1500 பேருக்கு முதல்வர் ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளார்.
கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு தமிழக முதல்வரும், கொளத்தூர் தொகுதியின் எம்எல்ஏவுமான முதல்வர் முக ஸ்டாலின் 1,500 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிவருகிறார். சென்னை கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட டான் பாஸ்கர் பள்ளியின் இந்த நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இந்த நிகழ்ச்சி முழுவதும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடைபெற்று வருகின்றது.
இதில் 1500 பேருக்கு ஒவ்வொருவருக்கும் 3 ஆயிரம் மதிப்புள்ள 15 பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. புத்தாடை , அரிசி, பருப்பு, ரவை, பால் பவுடர் உள்ளிட்ட 15 பொருட்கள் கொண்ட தொகுப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதுமட்டுமில்லாமல் ஒவ்வொருவருக்கும் ரூபாய் ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகின்றது.