Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கிறிஸ்மஸ் பண்டிகைக்காக வந்த நபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கீழே புதுச்சேரி விளை பகுதியில் பிரான்சிஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கேரளாவில் கொத்தனாராக வேலை பார்த்து வந்துள்ளார். இவரது முதல் மனைவி ஞான சௌந்தரி கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் அவரது தங்கை வனஜாவை பிரான்சிஸ் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இரண்டு மனைவிகளுக்கும் தலா 2 மகள்கள் இருக்கின்றனர்.

இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடுவதற்காக சொந்த ஊருக்கு வந்த பிரான்சிஸ் வீட்டிற்கு பின்புறம் இருக்கும் பட்டணம் கால்வாய் கரையில் இருக்கும் தோட்டத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக பிரான்சிஸ் கால்வாயில் தவறி விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரான்சிசின் உடலை விட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |