ஆஸ்கர் விருது விழாவில் வில் ஸ்மித் அறைந்த விவகாரம் குறித்து ஆஸ்கர் கமிட்டி நடவடிக்கை எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
94-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. அப்போது ஆஸ்கர் விருது மேடையில் ஸ்டாண்ட் அப் காமடியன் க்ரிஸ் ராக்கை, நடிகர் வில் ஸ்மித் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சிறந்த திரைப்படத்துக்கான விருதை அறிவிக்க மேடைக்கு வந்த க்றிஸ் ராக், வில் ஸ்மித் மனைவி குறித்து பகடியாக ஏதோ சொல்ல, அதனால் கோபமடைந்த வில் ஸ்மித் மேடையில் ஏறி க்றிஸ் ராக்கை பளார் என்று அறைந்து விட்டு இறங்கி வந்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ஆஸ்கர் கமிட்டி நிர்வாகம் விசாரணையை தொடங்கி உள்ளது. ஏற்கனவே தங்கள் ட்விட்டர் பக்கத்தில் ஆஸ்கர் நிர்வாகம் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்திருந்தது. வில் ஸ்மித் மீது ஆஸ்கர் சட்ட விதிகள் மற்றும் கலிபோர்னியா மாகாண சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று கூறப்படுகின்றது.