கேரளாவில் ஓணம் பண்டிகை ஆகஸ்ட் 21ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. நாளை வரலட்சுமி பூஜை தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது. விழாக்கோலம் களைகட்டத் தொடங்கியுள்ள நிலையில் இன்று மதுரை மல்லிகை விலை கிலோ ரூ.2,000க்கு விற்பனையானது. கொரோனாவுக்குப் பிறகு மதுரை மலர்ச் சந்தையில் பூக்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. அதேபோன்று நெல்லையிலும் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
நேற்று கிலோ 500-க்கு விற்ற மதுரை மல்லிகைப்பூ இன்று ஒரே நாளில் கிலோ ரூ.2000 ஆக விலை உயர்ந்தது. அதுபோல், கனகாரம்பரம் கிலோ ரூ.700, சம்பங்கி ரூ.400, முல்லைப்பூ ரூ.800, பிச்சிப்பூ ரூ.700, செவ்வந்தி 150, பட்டன் ரோஸ் ரூ.220, தாழம்பூ ஒன்று ரூ.650 என மற்ற பூக்களின் விலையும் உயர்ந்தது.