Categories
அரசியல் மாநில செய்திகள்

கில்லி மாதிரி சொல்லி அடிச்ச…. திமுகவின் சிங்கப்பெண்…. 2,110 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி…!!!

தமிழகத்தில் 27 மாநகராட்சிகள், 128 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19ஆம் தேதி நடைபெற்றது. இவற்றில் மொத்தம்  12 ஆயிரத்து 838 கவுன்சிலர் பதவிகள் உள்ளன. இந்த பதவிகளுக்கு பல்வேறு போட்டியாளர்கள் போட்டியிட்டனர். இதனையடுத்து  பல்வேறு மாவட்டங்களிலும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் சென்னையில் மட்டும் மந்தமாகவே நடைபெற்றது. இந்த தேர்தலில் 61 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில் வாக்குப்பதிவுக்கு பிறகு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்து வாக்குகள் எண்ணப்பட்டு வெற்றி பெற்ற வேட்பாளர்கள் பட்டியல் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி திமுக சார்பாக சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 136 வது வார்டில் போட்டியிட்ட இளம் வேட்பாளர் நிலவரசி துரைராஜ்(22) தனது வேட்பு மனுவை சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள மண்டல அலுவலகத்தில் தாக்கல் செய்து இருந்தார். அப்போது அவர், தன்னுடைய தந்தை 35 வருட காலமாக அரசியல் இருப்பதாகவும் தமிழக முதல்வரை தான் முன்னுதாரணமாக கொண்டு அரசியலில் இணைந்து உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் தனிப்பட்ட மக்களுடைய பிரச்சினைகளை தீர்த்து வைப்பேன் எனவும் அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் சென்னையில் திமுக சார்பாக போட்டியிட்ட நிலவரசி  துரைராஜ் 2110 வாக்குகள் வித்தியாசத்தில் மகத்தான வெற்றியை பெற்றுள்ளார்.

Categories

Tech |