Categories
சினிமா தமிழ் சினிமா

கிளம்பும் எதிர்ப்பு: வைரமுத்துவுக்கு விருது வழங்க மறுபரிசீலனை…!!!

ஓ.என்.வி குறுப்பு என்பவர் கேரளாவை சேர்ந்த ஓர் புகழ்பெற்ற மலையாள கவிஞர், இலக்கியவாதி மற்றும் திரைப்படப் பாடலாசிரியர். இவர் 2007ஆம் ஆண்டுக்கான உயரிய இலக்கிய விருதான ஞான பீட விருது பெற்றவர். இவருடைய பெயரால் 2017 ஆம் வருடம் நிறுவப்பட்டது தான் ஓ.என்.வி விருது. இந்த விருதானது இதுவரை மூத்த மலையாள படைப்பாளர்களுக்கு தான் வழங்கப்பட்டு வந்தது.

ஆனால் இந்த வருடம் கவிப்பேரரசு வைரமுத்துவ இந்த விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் வைரமுத்துவுக்கு அறிவிக்கப்பட்ட இந்த இலக்கிய விருதுக்கு எதிர்ப்பு கிளம்பியதையடுத்து விருதுகள் குழுவின் பரிந்துரைகளின்படி இந்த ஆண்டு வைரமுத்துவிற்கு அறிவிக்கப்பட்டிருக்கும் ஓ.என்.வி இலக்கிய விருது குறித்து மறுபரிசீலனை செய்ய முடிவு செய்துள்ளோம் என்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

Categories

Tech |