ஏமனில் அந்நாட்டு அரசுக்கும், ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. இப்போரில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டதோடு, லட்சக்கணக்கானோர் உயிருக்கு பயந்து அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர். இந்த சூழ்நிலையில் நீண்ட கால பேச்சுவார்த்தைக்கு பிறகு சென்ற ஏப்ரல் மாதம் இருதரப்பும் சண்டை நிறுத்தத்தை அறிவித்தது.
எனினும் சண்டை நிறுத்தத்தை மீறி அவ்வப்போது சிறிய அளவிலான மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இந்நிலையில் ஏமான் நாட்டின் தென் மேற்கு பகுதியில் உள்ள டேஸ் நகரில் நேற்று முன்தினம் இராணுவ வீரர்களை குறி வைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் திடீரென்று தாக்குதல் மேற்கொண்டனர். இவற்றில் ராணுவ வீரர்கள் 10 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். அத்துடன் பல வீரர்கள் படுகாயமடைந்தனர்.