Categories
சினிமா

“கிளாமர் போட்டோக்களுக்கு வந்த விமர்சனம்”… பதிவு போட்டு பதிலடி தந்த திவ்யபாரதி…

நடிகை திவ்யபாரதி இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் பகிர்ந்தது தற்போது வைரலாகி வருகின்றது.

சென்ற வருடம் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான பேச்சிலர் திரைப்படத்தில் கதாநாயகியாக திவ்யபாரதி நடித்து இளசுகளின் மனதை கவர்ந்தார். இந்தப் படத்திற்குப் பிறகு அடுத்தடுத்த பட வாய்ப்புகளைப் பெறுவதற்காக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கின்றார் திவ்யபாரதி.

இந்நிலையில் இவர் மாலத்தீவில் இருந்து தற்போது கிளாமரான புகைப்படங்களை பகிர்ந்து வருவது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது. திவ்யபாரதி பிகினி உடை அணிந்த புகைப்படங்களால் சில பெண்கள் இன்ஸ்டாகிராமில் தனிப்பட்டமுறையில் மெசேஜ் செய்திருக்கின்றனர். இதனை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் பதிவிட்டுள்ளார் திவ்யபாரதி. மேலும் இத்துடன் அவர் கூறியுள்ளதாவது. “உலகில் பல நெறிமுறைகள் உள்ளன. நமக்கு எது நல்லது எது கெட்டது என்பதை நாம் எடுத்துக்கொள்வதில் தான் இருக்கின்றது. அன்பாகவும் ஆதரவாகவும் மெசேஜ் அனுப்பும் இந்த பெண்களை பார்க்கும் பொழுது எனக்கு பெருமையாக இருப்பதாகவும் பெண்களே நீங்கள்தான் உண்மையான தேவதைகள் மற்றும் உங்கள் அனைவரையும் நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்” என்று குறிப்பிட்டிருக்கின்றார். இது தற்போது சமூக வளைதளத்தில் வைரலாகி வருகின்றது.

Categories

Tech |