பிரபல நடிகை திவ்யபாரதி பட வாய்ப்புகளைப் பெறுவதற்காக புதிய அஸ்திரத்தை கையில் எடுத்துள்ளார்.
சென்ற வருடம் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான பேச்சிலர் திரைப்படத்தில் கதாநாயகியாக திவ்யபாரதி நடித்து இளசுகளின் மனதை கவர்ந்தார். இந்தப் படத்திற்குப் பிறகு அடுத்தடுத்த பட வாய்ப்புகளைப் பெறுவதற்காக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கின்றார் திவ்யபாரதி.
இந்த அளவிற்கு கிளாமர் காட்டியும் இவருக்கு எதிர்பார்த்த அளவுக்கு படம் கிடைக்காததால் வேறு முயற்சியில் ஈடுபட்ட திவ்யபாரதி தன்னை அணுகும் இயக்குனர்களிடம் தொடர்ந்து படத்தை புக் செய்தால் சம்பளத்தை பாதியாக குறைத்துக் கொள்வதாக கூறியுள்ளார். இதன் மூலம் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாகி விடலாம் என திட்டம் தீட்டியுள்ளார் திவ்யபாரதி குறிப்பிடத்தக்கது.