Categories
மாநில செய்திகள்

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் திடீர் சிக்கல்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

சென்னையின் புதிய அடையாளமாக கிளாம்பாக்கம் மாறி கொண்டு வருகிறது. இது செங்கல்பட்டு மாவட்டத்தில் வண்டலூர் மற்றும் ஊரப்பாக்கம் இடையில் அமைந்திருந்தாலும் கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தின் சுமையை குறைக்க கூடிய வகையில் கடந்த மூன்று ஆண்டுகளாக புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த திட்டம் முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கி எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் முடக்கிவிடப்பட்டது. தற்போது மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கப்பட உள்ளது. தமிழகத்தின் மேற்கு மற்றும் தென் மாவட்டங்களுக்கு பேருந்துகள், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து பிரிந்து கிளாம்பாக்கம் பேருந்த நிலையத்தில் இருந்து இயக்கப்பட உள்ளன.

அதில் விழுப்புரம், திருவண்ணாமலை, திருநெல்வேலி, திருச்சி, தூத்துக்குடி, மதுரை, கும்பகோணம் நகரங்கள் அடங்கும். எனவே 88.52 ஏக்கர் பரப்பில் 130 அரசு பேருந்துகள், 130 ஆம்னி பேருந்து நிறுத்துமிடங்கள், 275 கார்கள், 3582 இருசக்கர வாகனம் நிறுத்த்துமிடங்கள் , கடைகள், உணவகங்கள், போக்குவரத்து அலுவலகம், பயணிகள், ஓய்வறை உள்ளிட்டற்றுடன் மிகவும் பிரமாண்டமாக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.கொரோனா தொற்று காரணமாக இரண்டு ஆண்டுகளாக பேருந்து நிலைய கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டது. தற்போது நிலைமை சீரடைந்ததால் விறுவிறுப்பாக வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்த பேருந்து நிலையம் வருகின்ற செப்டம்பர் மாத திறக்கப்பட திட்டமிட்டுள்ளது. வழக்கமாக தீபாவளி பொங்கல் பண்டிகை வந்துவிட்டால் சென்னையில் இருந்த பல லட்சம் பேர் சொந்தம் ஊர்களுக்கு சென்று வருபர். அப்போது கோயம்பேடு நெரிசலில் சிக்கி தவிக்கும் நிலை ஏற்படும்.

அதனால் வரும் அக்டோபர் 24ஆம் தேதி கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகைக்கு கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் சென்னை மக்களுக்கு ஒரு சிறந்த பரிசாக அமையும் என்று பல்வேறு தரப்பினரும் கூறப்படுகிறது. இந்நிலையில் கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையத்தில் கட்டுமான பணிகள் முடிவடைவதில் காலதாமதம் ஆகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. பேருந்து நிலையத்தின் முதன்மை பகுதி இன்னும் நிறைய பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. எனவே அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு தான் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் ரெடியாகும் என்று கூறப்படுகிறது. இது குறித்து தமிழக அரசு தரப்பு உரிய விளக்கம் கொடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |