Categories
உலக செய்திகள்

கிளாஸ்ரூமில் பள்ளி மாணவன் தீவைத்து எரிப்பு…. பிரபல நாட்டில் அதிர்ச்சி….!!!!!

வடஅமெரிக்க நாடான மெக்ஸிகோவில் பழங்குடி மொழி பேசியது ஒரு குற்றம் என்று பள்ளி மாணவன் வகுப்பறையில் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு மெக்சிகன் பள்ளிமாணவன் வகுப்பறையில் தீவைத்து எரிக்கப்பட்டான். இனபாகுபாட்டை முடிவுக்கு கொண்டுவர போராடும் ஒரு நாட்டில் பழங்குடியின மொழியில் பேசியதே அவனது ஒரே குற்றம் ஆகும். ஜூன் மாதம் மத்திய மாநிலமான குரேடாரோவிலுள்ள உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இச்சம்பவத்தில் 14 வயது மாணவனான ஜுவான் ஜமோரானோவின் (Juan Zamorano) இருக்கையில் 2 வகுப்பு தோழர்கள் மதுவை ஊற்றியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதனால் ஜுவான் தன் கால்சட்டை ஈரமாக உள்ளதை உணர்ந்து எழுந்து நின்றபோது இருமாணவர்களில் ஒருவர் ஜமோரானோ மீது தீவைத்து எரித்ததாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். அவர் 2-வது மற்றும் 3ம் நிலை தீக்காயங்களால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அணுமதிக்கப்பட்டார்.

இந்த வாரம் அவர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஜுவான் ஜமோரானோ மெக்ஸிகோவில் உள்ள ஓட்டோமி (Otomi) பழங்குடியினத்தைச் சேர்ந்த மாணவர் ஆவார். அவர் முன்பே ஓட்டோமி சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதன் காரணமாக பல்வேறு வாரங்களாக கொடுமைப்படுத்துதலுக்கு ஆளாகி வந்துள்ளார். இதனிடையில் தாக்குதல் நடத்தியவர்கள் மற்றும் பள்ளி அதிகாரிகளுக்கு எதிராக புகார் அளித்ததாக அவரது குடும்ப வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். தேவைப்பட்டால் நாட்டின் அட்டர்னிஜெனரல் அலுவலகம் இவ்வழக்கைக் கையாளலாம் என ஜனாதிபதி ஆண்ட்ரெஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோர் தெரிவித்தார்.

350,000 மக்கள் தொகையுடன் லத்தீன் அமெரிக்க நாட்டிலுள்ள சில பழங்குடி குழுக்களில் ஓட்டோமியும் ஒன்றாகும். இதில் ஓட்டோமி மொழி ஜுவானின் தாய் மொழி ஆகும். எனினும் அவர் அதை அதிகம் பேசவிரும்பவில்லை. ஏனென்றால் இது கேலி, துன்புறுத்தல் மற்றும் கொடுமைப்படுத்துதலுக்கு காரணம் ஆகும் என குடும்பத்தின் வழக்கறிஞர்களில் ஒருவரான எர்னெஸ்டோ பிராங்கோ ஊடகத்தில் தெரிவித்துள்ளார். ஜமோரானோவின் பூர்வீகம் காரணமாக அவரது ஆசிரியர்கூட அவரை துன்புறுத்தியதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டி இருக்கின்றனர். மெக்சிகோவின் தேசிய பழங்குடிஇன மக்கள் நிறுவனம், பாகுபாடு மற்றும் இனவெறி நிகழ்வுகளைத் தடுப்பதற்கு பள்ளிகளில் அவசர நடவடிக்கைகள் தேவை என கூறியுள்ளது.

Categories

Tech |