Categories
மாவட்ட செய்திகள்

கிளிகளை பறித்த அதிகாரிகள்… புதுவையில் போராட்டம்… நரிக்‍குறவ மக்கள் ஆத்திரம் …!!

புதுச்சேரியில் கிளிகளை பறித்துக்‍கொண்டதால் ஆத்திரமடைந்த நரிக்‍குறவர்கள், வனத்துறையினரை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி அடுத்த வில்லியனூர் கூடபக்கம் செல்லும் சாலையோரத்தில் 50க்‍கும் மேற்பட்ட நரிக்‍குறவ குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இப்பகுதிக்‍கு வருகை தந்த புதுச்சேரி மற்றும் தமிழக வனத்துறையினர், நரிக்‍குறவர்கள் வைத்திருந்த கிளிகள் மற்றும் துப்பாக்‍கிகளை எடுத்துச் சென்றுள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த நரிக்‍குறவர்கள், வனத்துறை அதிகாரிகள் வந்த காரை சிறைப்பிடித்து, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

Categories

Tech |