Categories
உலக செய்திகள்

கிழக்கு உக்ரைன்: தொடர்ந்து தாக்குதல் நடத்தும் ரஷ்யா…. 3.50 லட்சம் மக்கள் வெளியேற வலியுறுத்தல்…. வெளியான தகவல்….!!!!

உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் 135-வது நாளாக நீடித்து வருகிறது. இதில் கிழக்கு உக்ரைனிலுள்ள டொனெட்ஸ்க் மாகாணத்தை கைப்பற்ற ரஷ்யபடைகள் தாக்குதல்களை தீவிரப்படுத்தி இருக்கிறது. அம்மாகாணத்தில் ஸ்லோவியன்ஸ்க், அவ்டிவ்கா, குராஸ்னோரிவ்காவ் மற்றும் குராகோவ் போன்ற 4 நகரங்கள் அரசு படைகளின் வசம் இருக்கிறது. ஒரே நேரத்தில் அந்த நான்கு நகரங்களின் மீதும் ரஷ்ய படைகளானது தாக்குதல்நடத்த தொடங்கியிருக்கிறது.

அந்நகரங்கள் மீது ரஷ்யபடைகள் இரவு, பகல் பாராமல் தொடர்ந்து பீரங்கி குண்டுகள் மற்றும் ஏவுகணைகளை வீசி வருவதாக மாகாண கவர்னர் பாவ்லோ கைரிலென்கோ குற்றம்சாட்டி இருக்கிறார். அந்த அடிப்படையில் டொனெட்ஸ்க் மாகாணத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் நேற்று காலையுடன் முடிந்த 24 மணிநேரத்தில் அப்பாவி பொதுமக்கள் 5 பேர் கொல்லப்பட்டதாகவும், 21 பேர் காயமடைந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

ரஷ்யபடைகள் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளதால் டொனெட்ஸ்க் மாகாணத்தில் வசிக்கும் 3லட்சத்து 50 ஆயிரத்துக்கு அதிகமான மக்களை உடனே வெளியேறுமாறு பாவ்லோ கைரிலென்கோ வலியுறுத்தி இருக்கிறார். இதற்கிடையே உக்ரைனின் 2வது மிகப்பெரிய நகரமான கார்கிவ் மீதும் ரஷ்யபடைகள் தாக்குதல்களை விரிவுப்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Categories

Tech |