நிவர் புயலின் தாக்கம் காரணமாக கிழக்கு கடற்கரை சாலையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
புயல் காரணமாக கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மீனவ கிராமங்களில் கடல் அலை கடுமையான சீற்றத்துடன் வீசத் தொடங்கியுள்ளது. இதனால் கிழக்கு கடற்கரை சாலையில் வாகன போக்குவரத்துக்கு தடை செய்யபட்டுள்ளது. கிழக்கு கடற்கரை சாலையில் வழியாக வாகனங்கள் செல்ல கூடாது என விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்ட எல்லையான கீழ்புதுபட்டு பகுதியிலேயே வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. அய்யனார் கோவில், ஒலித்தாயபட்டு வழியாக திண்டிவனம் சாலைக்கு போக்குவரத்து மாற்றிவிடபடுகிறது. புதுச்சேரியிலிருந்து கோட்டகுப்பம் வழியாக வரும் வாகனங்களும் அனுமதிக்கப்படவில்லை. இருசக்கர வாகனங்கள் கூட கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்லக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.