பிரான்ஸில் ஒரு ஓவியம் 20 யூரோக்கள் போனாலே ஆச்சரியம் என்று கருதப்பட்ட நிலையில் ஆயிரம் மடங்கு அதிகமாக ஏலம் போனது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்சில் டௌலூஸ் என்ற நகரில் வசிக்கும் நபர் ஒருவர் தனது வீட்டில் கிழிந்து கிடந்த பழைய ஓவியத்தை ஏலத்தில் விடுவதற்கு தீர்மானித்துள்ளார். அந்த ஓவியத்தை ஏலம் விடுவதற்கு முன் 20 யூரோக்களுக்கு விற்றாலே போதும் என்ற நோக்கத்தில் வந்தவர் அதனை கனவிலும் கூட பார்க்க முடியாத அளவுக்கு 1000 மடங்கு அதிகமாக 2000 யூரோக்களுக்கு ஏலம் போயுள்ளது. இது மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் அந்த ஓவியத்தை வரைந்தவர் பற்றியும் எந்த நாட்டை சேர்ந்தது என்ற தகவல்களும் வெளிவரவில்லை.