Categories
தேசிய செய்திகள்

கிழிந்த ரூபாய் நோட்டுக்களை கொடுத்தால்…. வங்கியில் எவ்வளவு பணம் கிடைக்கும்?…. ரிசர்வ் வங்கி அறிவிப்பு….!!!!

இந்தியாவில் கிழிந்துபோன மற்றும் சேதமடைந்த ரூபாய் நோட்டுகளுக்கு எவ்வளவு மதிப்பு கிடைக்கும் என்பது குறித்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. நம்மிடம் இருக்கும் கிழிந்த ரூபாய் நோட்டுக்களை கொடுத்து பொருட்கள் வாங்குவது பெரிய பிரச்சனையாக உள்ளது. அதனால் மக்களின் சிரமத்தை போக்க அண்மையில் தனியார் வங்கிகள்,கூட்டுறவு வங்கிகளில் பொதுமக்கள் கிழிந்த மற்றும் மாற்றவே முடியாத ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து அனைத்து வங்கிகளிலும் ரிசர்வ் வங்கி அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், பொதுமக்களுக்கு கிழிந்த ரூபாய் நோட்டுகளுக்கு பதில் புதிய ரூபாய் நோட்டுகள் கொடுக்க வேண்டும் .சில்லறை நாணயங்களை இல்லை என்று சொல்லாமல் பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக கிழிந்த ரூபாய் நோட்டுகளுக்கு எவ்வளவு மதிப்பு என்பது குறித்து ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. கரன்சி தாளின் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட பகுதி கிழியாமல் அல்லது சேதம் அடையாமல் இருந்தால் முழுமையான ரூபாய் மதிப்பு கிடைக்கும்.

50 சதவீதத்திற்கும் மேல் சேதம் அடைந்திருந்தால் உங்களுக்கு கிழிந்த பணத்திற்கு நிகரான மதிப்பு கிடைக்காது. இது 20 ரூபாய் வரையிலான ரூபாய்களுக்கு மட்டுமே பொருந்தும். 40 சதவீதத்திற்கும் மேல் 80 சதவீதத்திற்குள் சேத மற்ற பகுதி இருந்தால் பாதி மதிப்பு மட்டுமே கிடைக்கும். மேலும் கிழிந்த ரூபாய்களுக்கு சரியான மதிப்பு கிடைக்காத போதிலும் வங்கிகளில் இருந்து ஆர்பிஐ- க்கு பணம் அனுப்பப்பட்டு அவை அங்கு அழிக்கப்படும்.உங்களிடமிருக்கும் கிழிந்துபோன அல்லது சேதமடைந்த பணத்தினை நீங்கள் எந்த வங்கியில் வேண்டுமானாலும் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம்.

Categories

Tech |