கிரிக்கெட் விளையாட்டானது பல நாடுகளில் விளையாடப்பட்டு வருகிறது என்றாலும் சர்வதேச அளவில் சில நாடுகளில் மட்டும்தான் இந்த விளையாட்டு பிரதிபலிக்கிறது. சர்வதேச அளவில் கிரிக்கெட் விளையாட்டில் மற்ற நாடுகளுக்கு சரிசமமாக விளையாடிய ஒரு அணிஎன்றால் அது ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி தான். ஆனால் 90களில் இந்த அணியின் நிலைமை வேறு. தற்போது இருக்கும் நிலைமை வேறு.
இந்த அணி ஒருகாலத்தில் பல நாடுகளுக்கு சவால் கொடுத்து வந்த நிலையில் தற்போது தங்களுடைய நாட்டில் நிலவி வரும் அரசியல் பிரச்சினைகள் காரணமாக பலவீனமடைந்து உள்ளது. இதனால் ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் தன்னுடைய வீரர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலையில் உள்ளது.
இந்நிலையில் ஜிம்பாப்வே இளம் கிரிக்கெட் வீரர் ரையான் பால் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “எங்கள் அணிக்கு ஸ்பான்சர் கிடைக்க வாய்ப்பிருக்கிறதா? அப்படி கிடைத்தால் ஒவ்வொரு தொடர் முடிந்ததும் நாங்கள் எங்களின் கிழிந்த ஷூக்களை பசையால் ஒட்டி விளையாட வேண்டிய அவசியம் இருக்காது என்று உருக்கமாக பதிவிட்டிருந்தார். இதையடுத்து ஷூவை ஒட்ட இனி பசை தேவையில்லை என ஸ்பான்சர் அறிவிப்பை புமா நிறுவனம் பதிவிட்டுள்ளது.