பிரபல யூடியூப் சேன்னல் மீது காவல்துறையில் புகார் அளித்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய இந்து தமிழர் கட்சி நிர்வாகி ராம ரவிகுமார், ஒரு சட்டம் போடுங்கள். ஏன் திருவள்ளுவரை வந்து கிறிஸ்துவமயமாக்குவதற்கு முயற்சிக்கிறீர்கள். இப்போது எந்த பெயரும் போடக்கூடாது என்கிறீர்கள், வள்ளல் ராமலிங்கத்தை ஒரிஜினலாக இருந்த விபூதியை அழித்துவிட்டீர்கள்.
ஆண்டாள் குறித்து பெரிய படித்தவர்கள், கவிஞர் சொல்லக்கூடியவர் அவதூறாக பேசுகிறார்கள். இது என்ன அநியாயமாக இருக்கு கேட்பதற்கு நாதியில்லையா, நாதியற்று போனவர்களா இந்து. இதை நாங்கள் ஜனநாயக ரீதியாக கேட்கின்றோம். நிச்சயமாக அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.
உள்ள விஷயங்களை தானே ஆவண படுத்துகிறோம் என்று சொல்கிறார்கள். அண்ணாத்துரை குறித்து பாரதிதாசன் குறிப்பிட்டதை தான் கிஷோர் கே சாமி குறிப்பிட்டார் ஏன் கைது செய்தீர்கள் ? பெரியார் குறித்தும் கருணாநிதி குறித்தும், அண்ணாத்துரை குறித்தும் ஈ.வே.ரா பேசியதெல்லாம் பொதுவெளியில் பேசுவோமா ? வேண்டாம். அது கூவம் மனத்திரும், இந்த வரலாற்றை நாங்கள் பேசினோம் என்றால்… என தெரிவித்தார்.