Categories
தேசிய செய்திகள்

கீமோதெரபி சிகிச்சையின்போது இண்டர்வியூ…. வேலை கிடைத்ததா? இல்லையா?…. நெகிழ்ச்சி சம்பவம்….!!!!!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் அர்ஷ் நந்தன் பிரசாத் என்பவர் வசித்து வருகிறார். இவர் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டவர் ஆவார். இவர் வேலையை இழந்த சூழ்நிலையில் வேறு ஒரு பணிக்காக ஆன்லைன் வாயிலாக அப்ளை செய்து, பின் இண்டர்வியூவில் பங்கேற்றார். அதாவது அவர் கேன்சருக்கான கீமோதெரபி சிகிச்சையில் இருக்கும்போதே இண்டர்வியூவில் கலந்துகொண்டார். ஆனால் அவருக்கு அந்த வேலை கிடைக்கவில்லை. ஏனெனில் தான் ஒரு கேன்சர் நோயாளி என அவர் கூறியதும், அவர்கள் இவருக்கு வேலையை வழங்க மறுத்து விட்டனர். இந்த நிலையில் இவர் இந்த அனுபவத்தை தன் லிங்க்டு இன் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது “தான் வேலை செய்ய விரும்புகிறேன். அண்மையில் கீமோதெரபியில் இருக்கும்போதே இண்டர்வியூவில் கலந்துகொண்டபோது நான் கேன்சர் சிகிச்சை பெறுகிறேன் என்ற காரணத்திற்காக தன்னை நிராகரித்துவிட்டனர். நான் எவரிடமும் கருணையை எதிர்பார்க்கவில்லை. நான் போராட தயாராக இருப்பதால், எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்” என பதிவிட்டிருந்தார். தற்போது இந்த பதிவு வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த மகாராஷ்டிராவைச் சேர்ந்த அப்ளைடு கிளவுடு கம்ப்யூட்டிங் ( Applied Cloud Computing ) நிறுவனத்தின் சிஇஓ நிலேஷ் சப்யூட், அர்ஷ் நந்தன் பிரசாத்துக்கு பதிலளித்துள்ளார். அதாவது “நீங்கள் ஒரு போராளி, இனிமேல் இண்டர்வியூ கொடுப்பதை நிறுத்துங்கள். நான் உங்களது புரோபைலை பார்த்தேன். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் எங்களது நிறுவனத்தில் சேரலாம். உங்களுக்கு இண்டர்வியூவே கிடையாது” என கூறியிருந்தார். இந்த பதிவு சமூகவலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், பலர் இதனை பகிர்ந்து தங்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர்.

Categories

Tech |