புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கீரமங்கலத்தில் கனமழை பெய்ததால் ஓட்டு வீடு இடிந்து விழுந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கீரமங்கலம் மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமங்களில் சென்ற சில நாட்களாகவே கன மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் நேற்று முன்தினம் கீரமங்கலத்தில் கனமழை பெய்தது.
கீரமங்கலம் மேற்குப் பகுதியை சேர்ந்த முருகையன் என்பவருடைய ஓட்டு வீடு கனமழை காரணமாக ஒரு பகுதி இடிந்து விழுந்தது. வீட்டில் யாரும் இல்லாததால் உயிரிழப்பு எதுவும் இல்லை. ஆனால் வீட்டிலிருந்த பொருட்கள் சேதம் அடைந்தது. இச்சம்பவம் குறித்து வருவாய்த் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றார்கள்.