Categories
உலக செய்திகள்

கீரிகளிடமிருந்து கொரோனா பரவியதால்…. 1,70,000,00 உயிர்களை கொல்ல…. டென்மார்க் அரசு முடிவு…!!

மிங்க் வகை கீரிகளிடமிருந்து மனிதர்களுக்கு கொரோனா பரவுவதால் அவற்றை கொல்ல  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சீனாவில் வுகான் நகரில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் நோய் தொற்று வவ்லால்கள் மூலம் பரவியதாக தகவல்கள் வெளியானது. தற்போது, இந்த கொரோனா தொற்று உலக நாடுகளுக்கும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில்  மனிதர்களை போலவே ஏற்கனவே விலங்குகளுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் டென்மார்க் நாட்டில் பண்ணைகளில் உணவுக்காக மிங்க் வகை கீரி பிள்ளைகள் வளர்க்கப்பட்டு, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு இறைச்சிக்காக ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

தற்போது இந்த மிங்க் வகை கீரி பிள்ளையிடம் இருந்து மனிதர்களுக்கு கொரோனா பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கீரி வளர்ப்பு பண்ணையில் வேலை செய்தவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என 214 பேருக்கு சமீபத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்களுக்கு எப்படி கொரோனா பரவியது என நடத்திய சோதனையில் மிங்க் கீரிகள் மூலமாக தான் இந்த வைரஸ் பரவியுள்ளது என தெரியவந்துள்ளது. மிங்க் மூலம் பரவிய கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களுக்கு வைரசின் வீரியம் மிகவும் அதிகமாக இருப்பதும் தெரியவந்துள்ளது.

எனவே இது கொரோனாவுக்கான தடுப்பூசியை கண்டுபிடிப்பதில் சிக்கலை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதனால் அந்த பண்ணையில் வளர்க்கப்படும் 1,70,00,000 கீரி பிள்ளைகளை கொள்ள டென்மார்க் பிரதமர் மீடி ஃப்ரிடெர்கிசன் உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த நடவடிக்கை வைரசின் பரிணாம வளர்ச்சியை தடுப்பதற்காகவும், கண்டுபிடிக்கப்பட உள்ள கொரோனா தடுப்பூசியின் தன்மையை நிலைநிறுத்தவும் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |