Categories
லைப் ஸ்டைல்

கீரைகளின் அற்புத பயன்கள்… படிச்சி பாருங்க தினமும் சாப்பிடுவீங்க… அவ்வளவு நல்லது…!!!

உடலிலுள்ள பல நோய்களுக்கு அருமருந்தாக அமையும் கீரைகளை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.

நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகள் உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக காய்கறிகள்,பழங்கள் மற்றும் கீரை வகைகளை அதிக அளவு உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. அதில் கீரைகளில் அதிக பயன்கள் நிறைந்துள்ளன. அதைப் பற்றி இப்போது தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

மணத்தக்காளி கீரை: வாய் புற்றுநோய் சரியாகும். தேமல் இருப்பவர்கள் இந்த கீரை சாப்பிட்டால் தேமல் காணாமல் போய்விடும்
வெந்தயக் கீரை: மலச்சிக்கலை குணப்படுத்தும். மண்ணீரல் மற்றும் கல்லீரலை பலமாக்கும். வாதம் மற்றும் காச நோய்களை விலக்கும்.
அகத்திக்கீரை: குடல் புண், அரிப்பு, சொறிசிரங்கு முதலிய தோல் நோய்களை குணப்படுத்தும்.
பசலைக்கீரை: உடல் தொற்று பெருமளவில் தடுக்கப் படுகிறது. வாய்ப்புண்ணுக்கு சிறந்த மருந்து.
முருங்கைக்கீரை: உடல் சூடு, தலைவலி, அஜீரணம், தோல் சம்பந்தமான வியாதி, பார்வை குறைகளை நீக்க உதவுகிறது.
வல்லாரைக் கீரை: உடல் எரிச்சல், சிறுநீர் மஞ்சளாக மாறுதல் முதலியன குணமாகும். குழந்தைகளுக்கு பேதி ஏற்பட்டால் இதனை கொடுக்கலாம்.
துளசி இலை: விஷத்தை முறிக்கும் தன்மை கொண்டது. எலுமிச்சைச்சாறு விட்டு அரைத்து வண்டு போன்ற விஷப் பூச்சிகள் கடித்த இடங்களில் பூசினால் விஷம் நீங்கி குணம் ஏற்படும்.
பொன்னாங்கண்ணிக் கீரை: மூல நோய்க்கு சிறந்தது.

இந்த கீரைகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொண்டால் எந்த நோய்களும் அண்டாது. குறிப்பாக இரவு உணவில் கீரைகள் சேர்ப்பதை தவிர்ப்பது நல்லது.

Categories

Tech |