Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

“கீரைகளுக்கு ராஜா இதுதான்”… ஏன்னா இதுல அவ்வளவு மருத்துவ பயன் இருக்கு… கட்டாயம் சாப்பிடுங்க..!!

கீரைகளின் ராஜா என்று அழைக்கப்படுவது பொன்னாங்கண்ணிக்கீரை. இதில் ஏராள மருத்துவ குணங்கள் உள்ளது. இதை குறித்து இதில் அறிந்து கொள்வோம்.

பல சித்தர்கள் கூற்றுப்படி, இந்த கீரையை தொடர்ந்து உட்கொண்டால் மேனி ஆனது பொன்போல ஜொலிக்கும். ஏழைகளின் தங்கபஸ்பம் என்றும் இதைக் கூறலாம். நீர்வளம் நிறைந்த எல்லா பகுதிகளிலும் இந்த கீரை காணப்படும். சிறு செடி வகையை சேர்ந்த இந்த கீரையை பெரும்பாலும் பலர் பயன்படுத்துவது இல்லை. மணலிக்கீரை மண்ணில் உள்ள பொன் சத்தை உறிஞ்சி நீரான நிலையில் தன்னை பெற்று உள்ளது. இதில் இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் அதிகம் நிறைந்துள்ளது.

நாட்டுப் பொன்னாங்காணி, சீமை பொன்னாங்கண்ணி என இரண்டு வகை உள்ளது. சீமை பொன்னாங்கண்ணி சிவப்பு நிறத்தில் இருக்கும் பெரும்பாலும் அழகுக்காக இது வளக்கப்படுகிறது. மருத்துவ குணம் குறைவு. பச்சையாக கிடைக்கும் நாட்டு பொன்னாங்கண்ணி தான் உடலுக்கு நன்மை பயக்கும். உடல் பிரச்சினைக்கு தீர்வாக இது உள்ளது.

தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் இந்த கீரையை உண்டு வந்தால் நன்கு தூக்கம் வரும். மத்திய நரம்பு மண்டலத்தை சீர் செய்து அனைத்து வித பிரச்சனைகளையும் குணப்படுத்துகிறது. ஞாபக சக்தியைத் தூண்டக் கூடியது. படிக்கும் குழந்தைகளுக்கு தொடர்ந்து கொடுத்து வந்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும். ஈரலை பலப்படுத்தும். மஞ்சள் காமாலை நோய்களுக்கும் இது ஏற்றது.

Categories

Tech |