கீர்த்தி சுரேஷ் தனுஷ் எனக்கு போன் செய்து பேசியதாக பேட்டியில் கூறியுள்ளார்.
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் கீர்த்தி சுரேஷ். இவர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் செல்வராகவனுடன் இணைந்து சாணிக்காகிதம் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் சென்ற மே மாதம் 6-ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷின் நடிப்பை பாராட்டி கொண்டிருக்கின்றார்கள் ரசிகர்கள். மேலும் தேசிய விருதே கொடுக்கலாம் என்கின்றனர். செல்வராகவனும் படத்தில் நன்றாக தனது நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
இதனிடையே படம் குறித்து கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளதாவது, தனுஷ் சாணிக்காகிதம் திரைப்படத்தின் டிரைலரை பார்த்ததுமே எனக்கு போன் செய்து பேசினார். நான் எனக்கு பக்கு பக்குன்னு இருக்கின்றது என்று கூறினேன். நானே அவரிடம் இருந்துதான் நடிப்பை கற்றுக் கொண்டேன். நன்றாக நடித்துக் காட்டுவார். அண்ணன் செல்வராகவன் தம்பி தனுஷுடன் சேர்ந்து நடித்ததில் மகிழ்ச்சி என கூறியுள்ளார்.