நடிகை கீர்த்தி சுரேஷ் தனது பாட்டியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது .
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ் . இவர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இதைத்தொடர்ந்து இவர் ரஜனிமுருகன், பைரவா, ரெமோ, தொடரி, சர்க்கார் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். தற்போது இவர் அண்ணாத்த, சாணிக் காயிதம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். நடிகை கீர்த்தி சுரேஷ் பிரபல மலையாள நடிகை மேனகாவின் மகள் ஆவார். நடிகை மேனகா தமிழில் ரஜினி நடிப்பில் வெளியான நெற்றிக்கண் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தனது பாட்டி சரோஜாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. நடிகை சரோஜா சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரெமோ படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு பாட்டியாக நடித்திருந்தார். மேலும் இவர் கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடிகர் கார்த்திக்கு பாட்டியாக நடித்திருந்தார் . தற்போது இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கீர்த்தி சுரேஷின் பாட்டியா இவர்! என ஆச்சரியமடைந்துள்ளனர்.