Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“கீழடியில் நடைபெறும் அகழ்வாராய்ச்சி”…. சுடு மண் செங்கல் கட்டிடம், சுவர் கண்டெடுப்பு….!!!!

கீழடியில் நடைபெறும் அகழ்வாராய்ச்சி பணியின் போது சுடுமண் செங்கல் கட்டிடம் கண்டறியப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் யூனியனில் உள்ள கீழடியில் எட்டாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகளானது சென்ற பிப்ரவரி மாதத்தில் இருந்து நடைபெற்று வருகின்றது. இதுபோலவே கொந்தகை, அகரம் உள்ளிட்ட பகுதிகளிலும் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்ற நிலையில் இதுவரை ஐந்து குழிகள் தோண்டப்பட்டு பாசி மணிகள், கண்ணாடி மணிகள், சேதமுற்ற நிலையில் பானைகள், ஓடுகள், யானை தந்தத்தால் செய்யப்பட்ட பகடைக்காய்,  சிறுவர்-சிறுமிகள் விளையாடும்  சில்லுவட்டுகள் என பல பொருட்கள் கண்டறியப்பட்டது.

இந்நிலையில் நேற்று  ஒரு குழியில் சுமார் ஆறு அடி ஆழம் தோன்றிய பொழுது சுடுமண் செங்கற்களால் ஆன கட்டிடம் தெரிய வந்துள்ளது. இந்த கட்டிடம் செங்கல் சுவர்போல் இருக்கின்றது. இதன் அருகிலேயே இரண்டு சுடு மண் பானைகள் சேதமடைந்த நிலையில் இருக்கின்றது. அந்த செங்கல்கள் அகலமாகவும் கனமானதாகவும் இருக்கின்றது. இதனால் நம் முன்னோர்கள் சுடுமண் செங்கற்களால் ஆன கட்டிடங்களைக் கட்டி நாகரிகமாக வாழ்ந்து வந்து தெரிகிறது. மேலும் தொல்லியல் அலுவலர்கள் அகழ்வாராய்ச்சி பணியில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

Categories

Tech |